மியன்மாரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை தொழிலாளர்கள் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது பெய்த மழையினால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்போது சுரங்கத்தில் மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 27 தொழிலாளர்கள் மணணுக்குள் புதைந்து விட்ட நிலையில் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது