Home உலகம்பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி முன்னிலை

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி முன்னிலை

by admin


பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியிருந்த நிலையில் இம்ரான் கானின கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 137 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில், 114 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 57 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை
ஏன நவாஸ் ஷரீப்பின் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.எனினும் தேர்தலில் எவ்வித முறைககேடும் நடைபெறவில்லை எனவும் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது எனவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More