குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மரண தண்டனையை செயற்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு தெளிவுப்படுத்த தயாராக இருப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் காணப்படும போதைப் பொருள் பாவணையை கட்டுப்படுத்த மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சரவை ஒருமித்த தீர்மானத்தை எடுத்துள்ளது. மரண தண்டனையை அமுல்படுத்துவது என அரசாங்கம் எடுத்த தீர்மானம் குறித்து சில தரப்பினர் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தால், இந்த நல்ல முடிவு என பெரும்பாலானோர் அங்கீகரித்துள்ளனர்.
நீதியமைச்சு, சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றம் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளன. மரண தண்டனையை அமுல்படுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் சம்பந்தமாக சர்வதேச அழுத்தங்கள் உள்ளன. ஜெனிவா மனித உரிமை பேரவையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்து தெளிவுப்படுத்த தயாராக இருப்பதாகவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அல் ஹூசெய்ன் சொல்வதனைக் கேட்டு செயற்பட வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் சொல்வதனைக் கேட்டு செயற்பட வேண்டிய தேவை இலங்கைக்கு கிடையாது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நல்லாட்சியினர் புதிய அரசியலாப்பினை உருவாக்க வேண்டும் என சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு யாரும் கட்டளையிட முடியாது எனத் தெரிவித்துள்ள அவர் புதிய அரசமைப்பு உருவாக்குதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவகின்றன எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழைப்பது தொடர்பில் சுதந்திர கட்சியின் சார்பில எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனற் போதிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாதென்பது தனது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்