Home இலங்கை “மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவதை எதிர்ப்போம்”

“மத்தள விமான நிலையம் இந்தியா வசமாவதை எதிர்ப்போம்”

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

மத்தள விமான நிலையமானது இந்தியா வசமாவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக அமையும் என தெரிவித்துள்ள ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அதற்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தினை இலங்கை விமானிகளைப் பயிற்றுவிக்கும் தளமாக பயன்படுத்துவதே சிறந்ததாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த  அவர், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்பன நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் அம்சங்களாகவே காணப்படுகின்றன என்பதனால் அவற்றின் மீது வெளிநபடுமுகளின் தலையீட்டினை அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்தமைக்கான வரலாறுகள் உள்ளதை அறிந்திருந்தும், மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் நடவடிக்கையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 400 அமெரிக்க டொலர் மில்லியன் ரூபாயை கடனாகப் பெற்றுக்கொள்வதற்காகவே தேசிய சொத்துகள், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar July 26, 2018 - 7:24 am

It’s true it’s seems to be agression of other nation in towards our internal affairs. These all comes in high light due to our politicians corrupt nature no one didn’t have the nationalism in their mind set. That’s what all other nations poke in their ill devil wishes in towards our land of pearl Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More