பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளின் சொத்துகளை பறிப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள், வங்கிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்ட நிலையில் தற்போதைய சட்டங்களில், அத்தகையவர்களின் சொத்துகளை பறிப்பதற்கான சரத்துகள் இல்லை.
இதனால், இதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் மசோதா-2018 என்ற புதிய மசோதா மத்திய அரசினால் உருவாக்கப்பட்டிருந்தது.இதன்படி குற்றவாளிகள் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பட்சத்தில் அவர்களை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த மசோதா கடந்த 19ம் திகதி நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுற்ற நிலையில் மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதா மீது விவாதம் மேற்கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது