குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவம் புதிதாக வர வேண்டிய எந்த தேவையும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார் என சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண கோட்டைக்குள் மாத்திரமல்ல, வடக்கில் எந்த இடத்திலும் தற்போது புதிதாக இராணுவத்தினரை நிலை நிறுத்த வேண்டிய தேவையில்லை. யாழ்ப்பாண கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்பதால், அங்கு இராணுவத்தினரை நிலை நிறுத்தும் எந்த தேவையும் இல்லை. யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர், நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படாது எனக் கூறியுள்ள நிலையில், புதிதாக இராணுவ முகாம்களை ஏற்படுத்தும் தேவையில்லை.
பிரதமர் உட்பட அரசாங்கம் மீண்டும் யுத்தம் ஏற்படாது என்ற நம்பிக்கையில் இருக்கும் போது, வடக்கில் உள்ள இராணுவத்தினரை அப்புறப்படுத்தி விட்டு, பொது பாதுகாப்புக்காக பொலிஸார் ஈடுபடுத்த வேண்டிய நிலையில், யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவ முகாமை வைத்திருப்பது தேவையாற்ற நடவடிக்கை எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
In fact Sri Lankan Army should be deployed in els where in Sri Lankan soil not only in northern parts of Sri Lanka. They should be in whole parts of Sri Lanka. Where as if there is any threats or national disaster comes over our country. They should be immediately deployed over there. Like wise where as in some other countries they were in under ground maneuvers. Like wise in Switzerland or els in Singapore. They are there. But not that frequent visible. Though there presence is inevitable over our countries stability.