முகநூல் பயன்படுத்தும் இந்தியர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் திருடியமை தொடர்பான வழக்கில் சி.பி.ஐ விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவினைத் தலைமையிடமாக கொண்ட கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பல லட்சம் மக்களின் அரசியல் தொடர்பான விருப்பு வெறுப்புகளை அறிந்து, அதற்கேற்ப அரசியல்வாதிகள் பிரசார யுக்தியை வகுக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அமெரிக்கா , இந்தியா உள்பட பல நாடுகளின் தேர்தல்களிலும், அனலிடிகா நிறுவனத்தின் பங்கு உள்ளதாகவும் சுமார் 5.62 லட்சம் இந்தியர்களின் முகநூல் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் முகநூல் நிறுவனம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டு, முகநூல் மற்றும் அனாலிடிகா நிறுவனங்களுக்கு, இந்திய மத்திய அரசு ஆணை அனுப்பியிருந்த போதும் அனாலிடிகா நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் , கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் சட்டவிரோதமாக இந்தியர்களின் தகவல்களை திருடியிருக்கலாம் எனும் சந்தேகம் எழுவதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார