முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை ஒரு போதும் தற்போதைய அரசாங்கம் கைது செய்யப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தேசிய நூலகம் ஆவணவாக்கல் சேவைகள் சபை அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ரீட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீதிமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக அரசாங்கம் விசாரணை நடத்தும் விதத்தை பார்த்தால் இதற்கு தீர்வு கிடைக்காது என்றும் இதனால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது கஷ்டமான விடயம் என்றும் அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுத்துவதற்கான வழியை உருவாக்கி வருவதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.