முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ மீது, 2006 ம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு, உதவி ஒத்தாசை புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தால் நிபந்தனையற்ற வகையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீஸ்கந்தராஜா எனப்படும் சர்மா என்ற இந்து மதகுரு ஒருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதியான மதகுரு காவற்துறையினருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதல்ல என உறுதிப்படுத்தப்பட்டதனை அடுத்து அவரை விடுதலை செய்யுமாறு நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார்.
ஒப்புதல் வாக்குமூலத்தை தவிர வேறெந்த சாட்சிகளும் பிரதிவாதிக்கு எதிராக இல்லை என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார். இதன்காரணமாக அவரை விடுதலை செய்யுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, 13 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த பிரதிவாதியை நிபந்தனையற்று விடுதலை செய்ய நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார்.