நீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 1820 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் ,பிரித்து வைக்கப்பட்ட 700 குழந்தைகள் இன்னமும் அவர்களின் பெற்றோருடன் சேர்த்து வைக்கப்படவில்லை எனவும் இதில் 431 குழந்தைகளின் பெற்றோர் தற்போது அமெரிக்காவில் இல்லை எனவும் சுட்டிக்காட்டக்கட்டுள்ளது
கடந்த மாதம நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்;ப்பின்படி பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட சிறுவர்களை ஜுலை 26-ஆம் திகதிக்குள் அவர்களின் பெற்றோருடன் மீண்டும் சேர்த்து வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை கட்டு;படுத்தும் நோக்குடன் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் நடைமுறை ஒன்றினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டதன் அடிப்படையில் சுமார் 2,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரித்து காப்பகங்களில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது