பொதிசெய்யப்பட்ட உணவு வகைகளில் மரபணு மற்றப்பட்ட வேதிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதிசெய்யப்பட்ட உணவு வகை மூன்றை பரிசோதனைக்கு எடுத்தால், அதில் ஒன்றிலு ள்ள உணவு, மரபணு மாற்றப்பட்டதாக உள்ளது என சோதனை முடிவில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது உணவுப்பொருட்கள் அனைத்தும் பொதியில் அடைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவை நீண்ட நாட்கள் பழுதாகாமல் இருப்பதற்காக பல்வேறு வேதிப்பொருட்கள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகிறன.
டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் டெல்லி, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள கடைகளில் கிடைக்கும் 65 வகையான பொதி செய்யப்பட்ட உணவுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டதில் 21 பொதிகளில் இருக்கும் உணவுகள் மரபணு மாற்றப்பட்டுள்ள பொருட்களை மூலப்பொருளாக கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பாதி இந்திய தயாரிப்பாகவும், பாதி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருந்துள்ளன. முக்கியமாக குழந்தைகளுக்கு பயன்படுத்தும் எண்ணெய், உணவுப்பொருட்கள் ஆகியவற்றிலும் இந்த மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது