162
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் நோக்கத்தில் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுவதாகவும், அதனால் கோயிலின் புனிதத்தன்மை கெடும் அபாயம் உள்ளதாகவும் சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் அரசைக் கண்டித்து வரும் 30-ம் திகதி கேரளத்தில் கடையடைப்பு நடத்தவும் அவை அழைப்பு விடுத்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அனைத்து பெண்களையும் அனுமதிக்க அண்மையில் தேவசம் போர்டு சம்மதித்துள்ளதாக கேரள அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love