உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் என்று இளைய இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் மகனும் இளைய இசையமைப்பாளருமான யுவன் இசையமைத்து தயாரித்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ இசை வெளியீட்டில் கலந்துக் கொண்டபோதே இளையராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.
சந்தோஷ் நாராயணன் பேசும்போது, ‘நான் பள்ளியில் படிக்கும்போது துள்ளுவதோ இளமை இசையை கேட்டு யுவன் ரசிகன் ஆனேன். இன்று வரை எப்படி இளைஞர்கள் நாடித்துடிப்பை அறிந்து யுவன் பாடல்களை கொடுக்கிறாரோ தெரியவில்லை’ என்றார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசும்போது, ‘நான் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடி பரிசு பெற்றது எல்லாமே யுவன் ஷங்கர் ராஜா சார் பாடல்கள் தான். தூரத்தில் இருந்து பார்த்த யுவன் சாரை இங்கு பக்கத்தில் நின்று பார்ப்பதில் மகிழ்ச்சி’ என்றார்.