168
கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் மடவளை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையில் இருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் மாத்தளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் இரண்டு பிக்குகள் உள்ளடங்குவதாகவும் இரு பேருந்துகளின் சாரதிகளின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love