மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் வழங்கப்படும் ராஜீவ் காந்தி சத்பாவனா விருதுக்கு மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் சிறந்த சமூக தொண்டு செய்பவர்களுக்கு ராஜீவ் காந்தி சத்பாவனா விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கு முன்னதாக அன்னை தெரசா, உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான், முகமது யூனுஸ், லதா மங்கேஷ்கர் போன்ற பல சிறப்பு மிக்கவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 24-வது முறை வழங்கப்படும் ராஜீவ் காந்தி சத்பாவனா விருதுக்கான நிகழ்ச்சி எதிர்வருடம் ஓகஸ்ட் 20-ம் திகதி ஜவஹர்பவனில் கோலாகலமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபால கிருஸ்ண காந்தி இலங்கைக்கான இந்திய தூதுவராகவும் கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.