தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்கள் தொடர்பில் யாழில் ஆராயப்பட்டது. குறித்த அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஐனாதிபதியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன் போது இந்த அலுவலகம் அமைக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அதேவேளை இந்த அலுவலகத்தினூடாக யாழ் மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டு பலரதும் கருத்துக்களும் பெறப்பட்டன. இக் கலந்துரையாடலில் குறித்த அலுவலகத்தின் அதிகாரிகள் அரசியல் வாதிகள் மற்றும் அரச வங்கிகள், அரச அலுவலகங்களின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்நு கொண்டிருந்தனர்.
அத்துடன் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
1 comment
நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான பணிகளை (Tasks) சிந்தனை அலசல் (brainstorming) செய்து பட்டியலிட வேண்டும்.
பட்டியலிட்ட பணிகளை உள்ளடக்கி ஒரு கால அடடவனையை (Project schedule) உருவாக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு கால அட்டவனை தமிழ்த் தரப்பினாலோ அல்லது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினாலோ உருவாக்கப்படவில்லை.
உருவாக்கப் பட்டிருந்தால் பணிகளை கண்காணித்து கட்டுப்படுத்தி தேசிய ஒருமைப்பாட்டிலும் நல்லிணக்கத்திலும் பல முன்னேற்றங்களை கண்டிருக்கலாம்.
மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இனியாவது அட்டவணையை உருவாக்கி செயல்திறன் மிக்க முகாமைத்துவத்தை செய்து ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் கட்டி எழுப்ப வேண்டும்.