இலங்கை பிரதான செய்திகள்

அலோசியஸ் – கசுனிற்கு மீண்டும் விளக்க மறியல் – நுவன் சல்காடு – சசித்ர தேவதந்திரிக்கு பிணை..

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

நுவன் சல்காடு – சசித்ர தேவதந்திரிக்கு பிணை

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான முகவர் நுவன் சல்காடு மற்றும் அந்த நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி சசித்ர தேவதந்திரி ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  தொலைபேசி உரையாடல்களை அழித்தமை மற்றும் திரிவுபடுத்திய குற்றச்சாட்டில், இவர்கள் இருவரும் இன்று குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட  பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இருவரும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link