ஏமனில் சவூதி அரேபிய விமானப் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதுடன் 124-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக nதெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் கடந்த 2015 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு சவூதியும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அல்-குடாய்டா துறைமுக நகரத்தை குறிவைத்து சவூதி அரேபிய விமானப்படை தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இந்தததாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்புகள் 70 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிட மாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் 80 லட்சம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் எடுத்துச்செல்லும் முக்கிய வழித்தடமாக குடேய்டா துறைமுகம் விளங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது
ஏமனில் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Aug 3, 2018 @ 02:51
ஏமனில் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏமனின் முக்கிய பகுதியான குடேய்டாவில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் சந்தைப்பகுதியில் சவூதி கூட்டணி படைகள் நேற்றையதினம் மேற்கொண்ட தாக்குதலிலேயே இவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும தாக்குதலில் படுகாயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் 80 லட்சம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் எடுத்துச்செல்லும் முக்கிய வழித்தடமாக குடேய்டா துறைமுகம் விளங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது