Home இந்தியாமேற்கு வங்காளத்தில் இன்றும், நாளையும் கறுப்பு தினம் அனுஸ்டிப்பு

மேற்கு வங்காளத்தில் இன்றும், நாளையும் கறுப்பு தினம் அனுஸ்டிப்பு

by admin


அசாமில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளத்தில் இன்றும், நாளையும் கறுப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு பட்டியல் வெளியிட்டதனையடுத்து அங்கு கள நிலவரத்தை பார்வையிடச் சென்ற 8 பேர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவினர் விமான நிலையத்திலேயே அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அரசு பிரதிநிதிகளை அஸ்ஸாம் காவல்துறையினர் இவ்வாறு கையாண்ட விதம் கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்களான அவர்களுக்கு இந்தியாவில் எந்த ஒரு இடத்திற்கும் செல்ல அனைத்து உரிமைகளும் உள்ளது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை நடத்திய விதம் அவமானத்துக்குரியது.

இதைக் கண்டித்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மாநிலம் முழுவதும் கருப்பு தினம் கடைப்பிடிக்க உள்ளதாக அக்கட்சியின் கட்சி பொது செயலாளர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More