அசாமின் சில்சார் விமான நிலையத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் இன்று தங்கள் மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். பங்களாதேசிலிருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவு பட்டியலில் சுமார் 40 லட்சம் விடுபட்டிருந்தமை கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்ததனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளை அசாம் மாநில காவல்துறையினர் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் குறித்த பட்டியல் வெளியான பின்னர் உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த நாடாறு மன்ற மற்றும் சட்டமன்ற உள்ளிட்ட 8 சென்றுள்ளனர்.எனினும் அவர்கள் அனைவரும் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவர்களை தடுத்து நிறுத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே தங்கியிருந்த அவர்கள் அசாமிலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது