கொங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கொங்கோவின் வடக்கு பகுதிகளில் 22 பேர் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்குப்பகுதியிலும் எபோலாவின் பாதிப்பு பரவியுள்ள நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு;ளளது. மேலும், 879 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் உலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ள எபோலா வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொங்கோவில் பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் இயங்கி வரும் நிலையில் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மருந்து உள்ளிட்ட உதவிப்பொருட்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எபோலா கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது