Home இந்தியாதிருநங்கைகளின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபா உதவித்தொகை

திருநங்கைகளின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபா உதவித்தொகை

by admin


திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள 2 லட்சம் ரூபா உதவித்தொகை வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.  பினராயி விஜயனின் அலுவலக முகப்புத்தக பக்கத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சமூக நீதித்துறையின் வழியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேரள அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உறுப்பு கல்லூரிகளில் அனைத்து பாட பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள.

பல்வேறு துறையிலும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதன்மை மாநிலமாக கேரள இடதுசாரி அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More