தெலங்கானா மாநிலம், யாதாத்ரி பகுதியில், பல ஊர்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 3 வயது முதல் 12 வயதான சிறுமிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 முதல் 7 வயது வரையிலான சிறுமிகளை கடத்திய குழு அவர்களை ஒரு கும்பலிடம் விற்றுள்ளதாகவும் இந்த சிறுமிகளுக்கு ஊசிகள் மூலம் ஹோமோன் மருந்து ஏற்றப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
வீடொன்றில் அழுகுரல் கேட்டதனையடுத்து அயலவர்களினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து கடந்த 31ம் திகதி அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்து 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் பல வீடுகளில் இருந்து பல குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹோமோன் மருந்து ஏற்றப்பட்டுள்ளமையினால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டுள்ளதாகவுமஇது தொடர்பில் Nமுற்கொண்ட விசாரணைகள் அடிப்படையில் ஒரு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சீல் வைத்துள்ள காவல்துறையினர் அங்கு கடமையாற்றும் தாதி ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமிகளை சில ஆண்டுகள் வரை வளர்த்து ஆளாக்கி, பின்னர் 13 அல்லது 14 வயது வந்த பின்னர் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அதிக விலைக்கு விற்க முடிவு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ள நிலையில் சிறு வயதில் தொலைந்து போன தங்களது குழந்தைகள் இந்த கும்பலிடம் சிக்கி இருப்பார்களோ எனும் சந்தேகத்தில் சில யாதாத்ரிக்கு வந்த வண்ணம் உள்ளதாகவும் சிலர் அவ்வாறு அங்கு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.