166
இசைஞானி இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டதனையடுத்து அவரது இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை மேற்கொள்கின்றது.
இதற்காக அவருடைய அல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகளை குறித்த மருத்துவமனை செய்து கொண்டிருக்கின்றது. இளையராஜா சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக இந்தத் தொகுப்புக்காக உருவாக்கி கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Spread the love