சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடுசபையின் டெஸ்ட் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முதலித்துக்கு முன்னேறியுள்ளார்.
பேர்மிங்காமில் நi;டபெற்ற இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்டில் 200 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் 934 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் கோலி முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த 934 புள்ளிகளே, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் கோலி பெறும் அதிகூடிய புள்ளிகள் என்பதுடன், இந்திய வீரரொருவர் பெறும் அதிகூடிய புள்ளி என்பதுடன் ஆசிய வீரரொருவர் பெறும் இரண்டாவது அதிகூடிய புள்ளி ஆகும்.
இலங்கையணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பெற்ற 938 புள்ளிகளே ஆசிய வீரரொருவர் பெற்ற அதிகூடிய புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.