163
பாராளுமன்றத்தில் 6 உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு அமைப்பாளர் பதவியும் 16 உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கியுள்ளமை ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சூழ்ச்சி என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06.8.18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்து அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்துக்களை தான் வரவேற்பதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Spread the love