பிரதான செய்திகள் விளையாட்டு

ஜெர்மனியின் வீரர் மரியோ கோமஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

ஜெர்மனியின் கால்பந்து அணியின் சிரேஸ்ட வீரரான மரியோ கோமஸ் (Mario Gomez ) சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அண்மையில் ரஸ்யாவில நடைபெற்ற உலககிண்ணப் போட்டியின் போது ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியதனால் அந்த அணி மீது கடும் விமர்சனம் எழும்பியிருந்த நிலையில் 33 வயதாக மரியோ கோமஸ்; ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள கோமஸ், தற்போது தான் ஓய்வு முடிவை அறிவிக்கும் நேரமாகும் எனவும் இது திறமையுள்ள ஏனைய இளைஞர்களுக்கு, அவர்களது கனவை நனவாக்க வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கால்பந்துக் கிண்ணத்தினைக் ஜெர்மனி கைப்பற்றிய போது முக்கிய பங்காற்றியிருந்த மரியோ கோமஸ் 2007-ல் இருந்து ஜெர்மனி அணிக்காக விளையாடி 78 போட்டிகளில் விளையாடி 31 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.