109
காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் இந்திய மதிப்பில் 300 கோடி ரூபாய் பெறுமதியுள்ள ஹெராயினை இன்று பறிமுதல் செய்த காவற்துறையினர் இரு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ஜம்மு மாவட்டத்தின் பத்தின்டி பகுதி வழியாக சிலர் போதைப்பொருட்களை கடத்துவதாக காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சந்தேகத்தின்பேரில் இருவரை சோதனை செய்தபோது அவர்கள்; சுமார் 50 கிலோ ஹெராயின் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்த காவற்துறையினர் ஹெராயினை பறிமுதல் செய்துள்ளதுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love