மானிடராய் பிறக்க மாதவம் செய்தலை விட மாதராய் பிறக்க பெரும்பாவம் செய்திருக்கிறார். வேண்டும் என்ற எண்ணங்களே மனதில் தோன்றியிருக்கிறது அல்லது மறைக்கிறது.
நிச்சயமற்ற வாழ்வின் போக்கு அனைத்தையும் தீர்மானிப்பதில் எத்தனையை பெண்கள் எதிர்கொள்வது? சமூகத்தின் பெரும் அந்தஸ்து வகிக்கும் பெண் உடலியல், உளவியல் என எத்தனை இடர்களை கடக்க வேண்டியிருக்கிறது.
சிறுமியாய், மாணவியாய், மனைவியாய், தாயாய் மனிதர்களுக்கு முகம் கொடுப்பதிலும் சமூகத்தில் பல பதவிகள் பெறுவதிலும் அவள் எவ்வளவு தூரம் அவஸ்தைப்படுகிறாள். ஆணாதிக்க வர்க்கத்தில் அடங்காபிடாரி, பிடிவாதகாரி, வாயக்காரி, விசயகாரி, வேறமாதிரி இன்னும் பல பெயர்களோடு உலவுகிறாள்.
சமூகத்தில் என்ன ஒழுக்க பிறழ்வுகள் நடந்தாலும் ஒரு போதும் ஆணை குறை கூறவதில்லை இவ்வுலகம். அதிலும் பெண் சமூகமே, “அவன் ஆம்பிளை உனக்கென்ன புத்தி” என்று தன்பாலினத்தையே திட்டிதீர்க்கும். ஆண்களை மட்டுமே தலையில் தூக்கி கொண்டாடும் சமூகம் பெண்களை தெரிந்தே தாழ்த்திவிடுகிறது. பெண்ணின்றி ஆணில்லை என்று உணராத கூட்டம்.
பெண் ஒரு முடிவில் உறுதியாய் இருந்தால் “அடங்காபிடாரி” என்று பட்டம் சூட்டியும் மேலும் “அடிச்சுவளர்க்கல” அதான் உப்பிடி திரியுது என்றும் பெண்சமூகத்தை சபிக்கிறது உலகம். அதுவே ஒரு உயர் இடத்தை அடைந்துவிட்டாள் என்றால் அவள் பிறந்த குலம் மற்றும் சிறுவயது தொட்டு செய்த அறியாத்தவறுகள், காதல், திருமண குலம் வரை அச்சு தவறாது அத்தனையையும் தான் பின்புறமாக கதைப்பார்கள், ஒரு போதும் சாதித்ததை, துன்பப்பட்டதை மறந்தாலும் சொல்லமாட்டார்கள், இல்லாவிடின் “படிச்ச திமிர்” அதுதான் தனிப்போக்கு ,திருமணமானால் கட்டியவன் சரியில்லை ஆம்பிளைக்கு அடங்காமல் திரியிறாள் என்றும், திருமணம் முடிக்காவிட்டால் அடக்க ஆக்களில்ல அதான் அவிட்ட மாடு போல திரியிறாள் என்று குறைகூறாது விட்டால் சாப்பாடு கூட செரிக்காது.
ஆண்/பெண் என்கிற வித்தியாசமே இல்லாத கூட்டங்களுக்கு, அமைதியாய் ஆம் போட்டு சொன்னதை செய்து மனம் குளிரவைத்தால் மட்டும் ” என்னமாதிரி பிள்ளை ” என்று முடித்துவிடுவார்கள். காலத்தொடர்கதை ஆகிப்போன பேதைகளின் வாழ்வு.
(தொடரும் )