அதிமேதகுஅமைச்சர் அவர்களே,
காணாமாலாக்கப்பட்டஉறவுகளின் வேண்டுகோள்
எங்களை இன்றுசந்தித்துஎமதுபிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்குநேரம் ஒதுக்கியமைக்குஎமதுநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கீழேகையொப்பமிட்டுள்ளநாங்கள், இலங்கையில் வடக்குகிழக்கைச் சேர்ந்தகாணமலாக்கப்பட்டவர்களின் குடும்பஉறுப்பினர்கள் ஆவோம். கடந்தஒருவருடமாக, நாங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மருதங்கேணிமற்றும் திருகோணமலைஆகிய இடங்களில், காணமலாக்கப்பட்டஎங்களுடைய அன்புக்குரியவர்களுடைய இருப்பிடங்கள் தொடர்பில் பதில் கேட்டு,வீதியோரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம்.
எங்களுடையஉறவுகள் யுத்தத்தின்போதும்,யுத்ததின் பின்னரும்,வெள்ளைவான் கடத்தல்கள் மூலம் கடத்திச் செல்லப்பட்டார்கள், எங்களுடையவீடுகளிலிருந்துபறித்துச் செல்லப்பட்டார்கள்,கிழக்கில் சுற்றிவளைப்புகளின் போது தூக்கிச் செல்லப்பட்டார்கள் மற்றும் பலகொடூரமானவழிகளில் எங்களிடமிருந்துபிரித்துச் செல்லப்பட்டார்கள். எங்களதுமகன்கள்,மகள்கள்,கணவர்கள் மற்றும் மனைவிகள்,யுத்தமுடிவின்போதுநாங்கள் அவர்களை இலங்கை இராணுவத்திடம் கையளித்தபின்னரும்,அவர்கள் காவலில் எடுத்துக்கொள்ளப்பட்டபிறகும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். எமதுகாணாமலாக்கப்பட்டஉறவுகள் இன்னும் எங்கேனுமொருசிறையிலோ, இரகசியதடுப்புமுகாமிலோவைக்கப்பட்டுள்ளார்கள் எனஎம்மில் பலர் உறுதியாகநம்புகின்றோம். எங்களில் சிலருக்குஎமதுஅன்புக்குரியவகளைப் பார்த்துபலதசாப்தங்கள் ஆகின்றன,நாங்கள் நிம்மதியுடன் இருந்தும் பலதசாப்தங்கள் ஆகின்றன.
நாங்கள், நாடுமுழவதும் உள்ளஒவ்வொரு இரணுவமுகாமிற்கும், ஒவ்வொரு அரசாங்கசிறைச்சாலைகளுக்கும், ஒவ்வொருகாவல்துறை அலுவலகத்திற்கும் சென்றுவந்துள்ளோம், எமதுகேள்விஒன்றே–அவர்கள் எங்கே? ஒவ்வொரு ஆணைக்குழுவிற்கும், ஒவ்வொருவிசாரணைக்கும், ஒவ்வொருஐநாஅதிகாரிக்கும், ஒவ்வொரு சர்வதேச அரசசார்பற்றநிறுவனத்திற்கு முன்னாலும், எங்களுடைய அன்புகுக்குரியவர்களை கண்டுபிடிப்பதில் அவர்களால் உதவக்கூடியதாக இருக்கும் என்றநம்பிக்கையில் சென்றுள்ளோம்.
ஆனால்,யுத்தம் முடிந்துஒன்பதுஆண்டுகள் ஆகியும்,நாங்கள் இந்தப் பேராட்டங்களைஆரம்பித்துஒருவருடமாகியும்,நாங்கள் மிகவும் பதைபதைப்புடன் தேடும் பதில்களைஎங்களுக்குதருவதற்கு, இலங்கைஅரசாங்கம் எந்தவிதநடவடிக்கைளையும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் வெயில்,மழை, தூசு போன்றமிககொடூரமானநிலமைகளில்,ஒரேகொள்கையுடன் வீதியோரத்தில் இருந்துவந்திருக்கின்றோம் – காணமால் போனஎங்களுடையஉறவுகளுக்குஉண்மையையும் நீதியையும் பெற்றுக்கொடுத்தல் மாத்தரமேஎமது இல்க்காகும். இந்தப் போராட்டத்தில் எம்மோடு இணைந்துகொண்டஎண்மர் இப்போது இல்லை. எமதுபோராட்டம் தொடர்கின்றது.
12 யூன் 2017 அன்றுஎம்மையாழ்ப்பாணத்தில் சந்தித்தசனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஎங்களுடையகோரிக்கைகளில் ஐந்தைநிறைவேற்றுவதற்குஉடன்பட்டார். அவைபின்வருமாறு:
1. இறுதியுத்தம் முடிவுக்குவந்ததறுவாயிலிலும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும் இலங்கை இராணுவத்தினரால் குறிப்பாக 2008-2009 காலப்பகுதியில் சரணடைந்தவர்கள் உள்ளடங்கலாககைதுசெய்யப்பட்டசகலரதும் பெயர்ப்பட்டியல் ஒன்றினைவெளியிடவேண்டும்.யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் குறிப்பாகமே 2009 இல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இலங்கை இராணுவத்தினரதுகட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் அவ்வாறானகைதுகள் ஃ சரணடைவுகள் பெருமளவில்; இடம்பெற்றன. அவ்வாறாககைதுசெய்யப்பட்டவர்கள்,சரணடைங்தவர்களின் பட்டியல் மக்கள் வெளியேறிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தநிலைகளுக்குப்பொறுப்பானவௌ;வேறு இராணுவபிரிவுகளின் வசம் இருத்தல் வேண்டும். அரசாங்கமானது இத்தகவல்களைதிரட்டிஅதில் எமதுஉறவுகள் எவரேனும் உள்ளனராஎனக் கண்டறியஅப்பட்டியலைஎம்மிடம் வழங்கவேண்டும். ;
2. யுத்தத்தின்போதுஅல்லதுயுத்தத்தின் பின்னர் இலங்கை இராணுவத்தினரால் அல்லதுபொலிசாரினால் இரகசியமாகநடாத்தப்படும்; ஃ நடாத்தப்பட்டமுகாம்களில் யுத்தத்தின் போதுஅல்லதுயுத்தத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுதடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் உள்ளடங்கியபட்டியலைவருடாந்தரீதியாகவெளியிடவேண்டும்,கைதுசெய்யப்பட்டவர்களின் தற்போதையநிலைபற்றியும் பகிரங்கப்படுத்தவேண்டும்.
3. இலங்கையின் சட்டரீதியாகவோசட்டத்திற்குமுரணாகவோகைதுசெய்யப்பட்டுதடுப்புமுகாம்களில் ஃ சிறைச்சாலைகளில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் அல்லதுஅவசரகாலச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டவர்களின் விபரங்கள் உள்ளடங்கியபட்டியலைவெளிப்படுத்தல். 1983ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரைவருடாந்தம் இம்முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கியபட்டியலைவெளியிடவேண்டும்.
4. அரசாங்கமானது மேற்குறித்த தகவல்கள் உள்ளடங்கிய பட்டியல்களை காணாமலாக்கப்பட்டவர்களது குடும்பங்கள் அவர்களதுசட்டத்தரணிகள் அவர்களது பிரதிநிதிகள் கொண்டபிரதிநிதிகள் குழுவிடம் கையளிக்கவேண்டும்.
5. மக்கள் பார்வையிடத்தக்க விதத்தில் கடந்த 30 வருடங்களில் பல்வேறு அரசாங்கங்களினால் காணாமலாக்கப்பட்டவர்களின் விபரம் உள்ளடங்கியகுழுக்களின் அல்லதுஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடுதல். அத்தகைய அறிக்கைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூறுதல் வேண்டும்.
சனாதிபதியை மூன்றுவௌ;வேறுசந்தர்ப்பங்களில் அதன் பின்னர் சந்தித்தும் அவர் மேற்படிகோரிக்கைகளைநிறைவேற்றுவதாகஅளித்தவாக்குறுதிதொடர்பில் எந்தவொருநடவடிக்கையையும் எடுக்கவில்லை.
16 நவம்பர் 2017 அன்று,காணமல் போனோருக்கானஅலுவலகம் (OMP தொடர்பில் எங்களுடையகரிசனைகளைவெளிப்படுத்திஎழுதியிருந்தோம். ழுஆPயைநாம் ஏற்றுக் கொள்வதாயின் பின்வரும் விடயங்கள் பூர்த்திசெய்யப்படவேண்டும் எனநாம் குறிப்பிட்டிருந்தோம:
ஆணையாளர்கள் நியமிக்கப்படுகின்ற செயல்முறைமிகவும் வெளிப்படையானதாகவும், எங்களுக்கு பொறுப்புகூறக்கூடியதாகவும் இருக்க வேண்டிய தேவை உள்ளது.
குறைந்தது இரண்டு ஆணையாளர்களாவது காணமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். குறைந்தது நான்கு ஆணையாளர்கள் தழிழ் பேசுபவர்களாக இருக்கவேண்டும்.
நம்பகத்தன்மையானசர்வதேசவல்லுனர்கள் இந்தசெயல்முறையைகண்காணிப்பதற்குநியமிக்கப்படவேண்டும்,அத்துடன்,
நம்பகத்தன்மையானசட்டரீதியாகவழக்குத் தொடரக்கூடியபொறிமுறைஒன்றும்,காணமல் போனோருக்கானஅலுவலகத்துடன் சேர்ந்துஆரம்பிக்கப்படவேண்டும்.
இருந்தும்,காணமல் போனோருக்கான அலுவலகத்திற்கு எங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்கு எங்களுக்கு எந்தசந்தர்ப்பங்களும் வழங்கப்படவில்லை. நாமாக அச்சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு மேற்படி கருத்துக்களை சனாதிபதி, பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றிடம் தெரிவித்தோம். ஆனால் எந்தப் பயனும் கிட்டவில்லை. ஏலவே குறிப்பிட்டது போல சனாதிபதிபட்டியல்களை வெளியிடுவது தொடர்பில் வழங்கியவாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆகவே OMP பொறிமுறையால் எங்களுக்குஎந்தவிதமானதீர்வகளும் கிடைக்காதுஎன்றமுடிவிற்குவருவதற்குநாம் தள்ளப்பட்டுள்ளோம்.
நீண்டகால இழுபறிக்குப் பிறகு OMPஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் உள்ளடக்கம் உள்ளகமுரண்பாடுகளைக் கொண்டமைத்துள்ளது. எம்மில் ஒருவரையும் ஆணையாளர்களுள் ஓருவராகஉள்ளடக்கியிருந்தமையைநாம் கவனத்தில் கொள்கிறோம். அனால் இதுவும் ஒருசடங்குரீதியாகசெய்யப்பட்டுள்ளது என அஞ்சுகிறோம். நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் இறுதிகாலயுத்தத்தின் போது இராணுவத்தின் சட்டவிவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளராக கடமையாற்றியவர். வடக்குகிழக்கை சேர்ந்தகாணமால் போனோர் பிரச்சனையில் செயற்பாட்டுஅனுபவம் உள்ளஎந்தசிவில் சமூகப் பிரதிநிதியும் OMPயில் உள்வாங்கப்படவில்லை என்பதும் வினோதமானது.ழுஆPக்குநியமிக்கப்பட்டுள்ளகொழும்புசிவில் சமூகபிரதிநிதிஒருவர் கடந்தகாலத்தில் சனாதிபதிசிறிசேனஃ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்க்காக பிரச்சாரம் செய்தவர். அவர் இந்த அரசாங்கத்தை சங்கடத்திற்குள் கொண்டுவரும் எந்தகாரியத்தையும் செய்யமாட்டார். இவைஎல்லாம் ஒருபுறம் வைத்துபார்த்தாலும் இன்று எமக்கு தேவைஉ றுதிமொழிகள் அல்ல நடவடிக்கைகளே என்பதே எமதுநிலைப்பாடு.
அண்மையில் OMP அலுவலகம் வடக்குகிழக்குஉட்படபலபிரதேசங்களில் ஆலோசனைக் கூட்டங்களைநடத்திவருகின்றனர். எங்களுக்குஆலோசனைக் கூட்டங்களைநடத்துவதில் எந்தவொருபிரச்சனையும் இல்லை. அனால் காணமால் போனஉறவுகள் அமைப்புரீதியாகபலகாலமாகவேசெயற்பட்டுவருகிறோம். எமதுகோரிக்கைகள் என்னஎன்பதைப் பொதுவெளியில் தெளிவாகவேமுன் வைத்துள்ளோம். இப்பொழுதுதேவைமேலதிக கூட்டங்கள் அல்ல. காத்திரமான நடவடிக்கைகளே. உள்ளூர் மற்றும் வெளிநாட்டுதரப்புக்கள் அரசாங்கத்தோடு நல்லுறவுபாராட்ட விரும்புவதற்காக எங்களை மீது எங்களைகண்மூடித்தனமாக நம்பிக்கைவைக்குமாறு கேட்கமுடியாது. ஒவ்வொரு முறையும்ஒருஆணைக்குழுவோஅல்லதுஅலுவலகமோஅமைக்கப்படும் போதுஅதன் முன் அழுது,மண்டியிட்டுமுறையிடஎங்களைஎதிர்பார்க்கவேண்டாம். கடந்தகாலங்களில் நாங்கள் போதுமானளவுஅதனைசெய்துவிட்டோம். நல்லெண்ணத்தைகாட்டவேண்டிய சுமை OMP மீதுள்ளது. OMP எம்மைசந்திக்கவரும் போதுநாங்கள் காத்திரமானஒருவேண்டுகோளைவைத்தோம். சனாதிபதிசிரியசேனதருவதாகவாக்குறுதிஅளித்தபட்டியல்களைஎனபெற்றுத் தரமுயற்சிக்காக கூடாது? இதுவரைஅதற்குதிருப்திகாரமானபதில் இல்லை.
அதிமேதகுஅமைச்சர் அவர்களே,
இந்தஅரசாங்கம் பதவிக்குவந்தகாலத்திலிருந்துசர்வதேசசமூகம் இவர்களின் அரைகுறைமுயற்சிகளுக்குஆதரவுநல்கச் சொல்லிஎங்களைகேட்டுவந்துள்ளனர். அரசாங்கத்தின் மீதுபிரயோகிக்கப்படும் அழுத்தம் இப்போதுஎங்கள் மீதுசெலுத்தப்ப்படுகிறது. தீர்வுகளைநோக்கிநாங்கள் வேலைசெய்யத் தயார் என்பதைகாட்டும் பொறுப்புஎங்கள் மீதுசுமத்தப்படுகிறது. சுயமாகசிந்தித்துமுடிவெடுக்கும் தகமைஅற்றவர் போல் எங்கள் மீதுபிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல. யாருமே – அரசியல் கட்சியாக இருக்கலாம் அமைப்பாக இருக்கலாம் – வீதிக்கு இறங்கிபோராடுமாறுஎம்மைகோரவில்லை. அதுஎங்கள் முடிவு. நாங்களேஎமதுஎதிர்காலத்தைதீர்மானிக்கின்றோம். எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருக்கலாம் அனால் நாம் அவற்றைதீர்த்துக் கொள்வோம். அனால் எமக்குஎன்னதேவைஎன்பதில் எல்லோரும் தெளிவாக இருக்கிறோம். இலங்கைஅரசாங்கத்தின் ஆணைக்குழுக்களைஅலுவலகங்களைநாம் நம்புவதாக இருந்தால் செயலில் மாற்றத்தைகாட்டசொல்லுங்கள். இலங்கைஅரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் இதைஎடுத்துச் சொல்லுங்கள்.
நன்றி