Home உலகம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது – சவால்களை எதிர்கொள்வாரா இம்ரான்கான்…

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது – சவால்களை எதிர்கொள்வாரா இம்ரான்கான்…

by admin


பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள், ஏற்கனவே முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது.

116 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, சிறிய கட்சிகளுடன் சேர்ந்து அரசு அமைக்க உள்ளது.இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுவதற்கான அழைப்பை அந்த நாட்டின் ஜனாதிபதி மம்னூன் உசேன் விடுத்து உள்ளார்.

இந்று கூடும் நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள். அதனைத் தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும்.நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 இடங்களை கைப்பற்றி உள்ளது. மற்றொரு முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இவ்விரு கட்சிகளும் தேர்தலுக்கு பின்னர் கைகோர்த்து உள்ளன. இது இம்ரான்கான் கட்சிக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் லாகூர் மாதிரி நகரில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பின் இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி, கூட்டு வியூகம் ஒன்றை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் வகுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் நிறுத்தப்படுகிறார்.இம்ரான் கானுக்கு ஷாபாஸ் ஷெரீப் கடும் போட்டியை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தானில் நிலவுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More