நாட்டில் 30 வருட காலமாக நிலவிய சிவில் யுத்தம் காரணமாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முறையான கல்வி மற்றும் ஆளுமை அபிவிருத்திக்கான வாய்ப்பை கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் மத்தியில் வருமானமீட்டக்கூடிய வாய்ப்புகள் குன்றிக் காணப்படுகின்றன. SOS சிறுவர் கிராமங்கள் இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய தீர்மானித்திருந்ததுடன், குறைந்த வருமானமீட்டும் இளைஞர்களுக்கு தமது திறனை விருத்தி செய்து கொள்வதற்காக தொழில் பயிற்சி நிலையமொன்றை நிறுவி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாண தொழில் பயிற்சி நிலையம் கடந்த ஜுன் மாதம் அங்குரார்ப்பணம் செய்திருந்ததுடன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் பிரகாரம், வாயு சீராக்கிகள் பழுதுபார்ப்பு, அழகியல், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி போன்றவற்றுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இளைஞர்களுக்கு சுயாதீனமாக வாழ்வதற்கு அவசியமான வாய்ப்புகளை வழங்கல் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்கல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் ளுழுளு சிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளார்.
அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘யாழ்ப்பாண தொழில் பயிற்சி நிலையத்தினால் இளைஞர்கள் மற்றும் எமது ளுழுளு சிறுவர் கிராமத்தின் இளைஞர் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் போன்றோருக்கு பயற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனூடாக அவர்களுக்கு நிரந்தர தொழிலில் ஈடுபடுவதற்கு அவசியமான திறனை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எதிர்காலத்தில் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சுயாதீனமாகவும் தன்னிறைவுடன் தொழில் வாய்ப்புகளில் ஈடுபடக்கூடியதாக இருக்கும்’ என்றார்.
ஒவ்வொரு பயிற்சித்திட்டமும் துறையின் நிபுணரால் முன்னெடுக்கப்படுகிறது. ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கற்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இதில் விரிவுரைசார் மற்றும் பிரயோகசார் அறிவு வழங்கப்படுகின்றன. யாழ்ப்பாண தொழில் பயிற்சி நிலையத்தில் தற்போது குறைந்த வசதிகள் படைத்த 60 இளைஞர்களுக்கு கற்கைகள் வழங்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் நிலவும் உயர் தொழில் வாய்ப்புகளின்றி காணப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் தொழில் சந்தையின் மாறுபடும் தேவைகள் மற்றும் போதியளவு கல்வியறிவின்மை ஆகியன தொடர்பில் இந்த நிலையம் கவனம் செலுத்தி, இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன், நம்பிக்கையுடனும் சுயாதீனமாகவும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துகிறது.
யாழ்ப்பாணத்தில் தனது தொழில் பயிற்சி நிலையத்தை நிறுவியுள்ளதுடன், இலங்கையில் ளுழுளு தற்போது நான்கு தொழில் பயிற்சி நிலையங்களை கொண்டுள்ளது. ஏனைய நிலையங்கள் மொனராகலை, மல்பொத மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.
இலங்கை ளுழுளு சிறுவர் கிராமங்கள் பற்றி
இலங்கையில் ஆறு ளுழுளு சிறுவர் கிராமங்கள் காணப்படுகின்றன. அவை அனுராதபுரம், காலி, மொனராகலை, நுவரெலியா, பிலியந்தலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. இவற்றில் தற்போது சுமார் 800க்கும் அதிகமான சிறுவர்கள் காணப்படுகின்றனர். மேலும், குடும்ப வலுவூட்டல் நிகழ்ச்சி (குளுP) ஊடாக குறைந்த வசதிகள் படைத்த குடும்பங்களை ஒன்றாக பேண முடிந்துள்ளதுடன், குடும்பங்களையும், சமூகங்களையும் வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தில் தற்போது 3000க்கும் அதிகமான குடும்பங்கள் காணப்படுகின்றன.
மேலதிக விபரங்களுக்கு, https://www.soschildrensvillages.lk/