Home இலங்கைஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை…

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை…

by admin


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் அரசியலில் பிரவேசிக்கப் போவதில்லை என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்வதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது முகநுல் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்ததாகவும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் தான் நன்கு அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சிலர் தன்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் தனது நம்பகத்தன்மை தொடர்பிலும், தனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் தான் மதிப்பளிப்பதாக தெரிவித்த அவர் தானன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை எனவும், அவ்வாறான ஓர் உத்தேசம் இல்லாத நிலையில் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க போவதில்லை என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என தான் நம்புவதாக குறிப்பிட்ட குமார் சங்கக்கார, பொதுச்சேவையில் பொறுப்புக்கூறல், நேர்மை, வெளிப்படைத்தன்மை, மரியாதை என்பவற்றுடன் பணியாற்ற வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பொதுமக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட பொது ஊழியர்கள் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறிய அவர், கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னர் தனது பிரதான நோக்கம் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது மட்டுமேயாகும். அத்துடன் அறக்கட்டளைகளுடன் இணைந்து பல்வேறு சேவைகளை ஆற்றுவதற்கு விரும்புவதாகவும்,  கிரிக்கட் துறையில் தொடர்ந்தும் ஏதோ ஓர் வகையில் சேவையாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More