பாராளுமன்ற உறுப்பினர் என்ற ஆடை மக்களால் அணிவிக்கப்பட்ட ஆடை எனவும் அதனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கலைக்க தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (13.08.18) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர், 2015 ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்திய மக்களின் எதிர்ப்பார்ப்பு இப்போது சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னர் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை தேயிலை, தேங்காய் மற்றும் ரபர் போன்றவை எனவும் ஆனால் தற்போது துறைமுகம், விமான நிலையம் என்பன ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.