Home இலங்கைவடபகுதி மக்கள் மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு, அனுமதிக்கமாட்டார்கள்

வடபகுதி மக்கள் மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு, அனுமதிக்கமாட்டார்கள்

by admin


தெற்கில் தேவையற்ற பயபீதி நிலவுகின்றது. ஆனால் வடபகுதி மக்கள் மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு, ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என, ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு எவை சிறந்த விடயங்கள் என கதைப்பதற்கு ரணில்விக்கிரமசிங்கவிற்கும் பசிலுக்கும் அருகதையில்லை எனக் குறிப்பிட்ட அவர், கடந்த 70 வருடங்களாக இரு பிரதான கட்சிகளும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் எவையும் தங்களிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தனக்கு 32 வருடங்கள் தேவை என ரணில்விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்,அவரிற்கு தற்போது 70 வயதாகிவிட்டதால் அவர் அது வரை உயிருடன் இருப்பாரா என்பதே சந்தேகம் எனவும், பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மீண்டுமொருமுறை அதிகாரத்தை கோருகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More