111
இந்தியா முழுவதும் நாளை 72-வது சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், “ சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றுகிறார். முதலில் இந்தியிலும், அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு இரவு 8 மணியளவில் அகில இந்திய வானொலி ஒலிபரப்பும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love