Home இலங்கைமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிடப்பட்டன…

முல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிடப்பட்டன…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டமையினால் அப் பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்த தீயினால் 8 வாடிகள் 3 படகுகள், 2 இயந்திரம் 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து அழிவடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆபத்தான சுருக்குவலையினை மின் ஒளி பாச்சி மீன்பிடிக்கு பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 12ம் திகதி மாலையில் கடற்றொழில் அமைச்சர் நேரில் சென்று அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கி அதுவரை குறித்த முறையினை தடை செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திங்கட் கிழமை மாலை 6 மணியளவில் தென்னிலங்கை மீனவர்கள் இதே தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை கடலிற்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே இலங்கை நேரம்  இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் வலைகள் என அனைத்தும் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டதோடு பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More