அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நீதிமன்றில் நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் அந்நாட்டு உச்ச நீதிமன்றிற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் படி லண்டன் அவன்பீல்டு நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது, அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதில் அவன்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் காவற்துறையின் பலத்த பாதுகாப்புடன் அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை நீதிமன்றிற்கு, நவாஸ் ஷெரீப் அழைத்து செல்லப்பட்டார்.
நீதிபதி முன்பு முன்னிலைப்படுத்தப்பட்ட நவாஸ் ஷெரீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதேவேளை இந்த வழக்குகளில் தொடர்புடைய நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.