இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி இன்றையதினம் டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க மூவர்ண தேசியக்கொடியேற்றிய பிரதமர் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதன் பின்னர் சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்த அவர் இந்தியா புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும் சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க வேண்டியது நமது கடமை எனத் தெரிவித்துள்ள அவர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை இந்த அரசு உறுதி செய்துள்ளது எனவும் பேரிடர் காலத்தில் கருணையுடனும், போர்க்காலத்தில் ஆக்ரோஷத்துடனும் தமது ராணுவ வீரர்கள் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்