பெரியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர் மழையால் விமான நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கியதனால் கொச்சி விமான நிலையம் 18-ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதன காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தினால் பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முப்படையினருடன் இணைந்து பல்வேறு அமைப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலோர மாவட்டமான கொச்சியில் மீண்டும் கனமழை பெய்து வருவதனால் பெரியார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளதன் காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து இவ்வாறு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது