இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று அளித்த தேநீர் விருந்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர்ந்த ஏனைய நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில ஆளுநர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம் என்பதனால் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் இன்று அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் , துணை முதல்வர் , சபாநாயகர் , உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற போதும் ஏனைய நீதிபதிகள் கலந்து கொள்ளவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் ராஜ்பவனில் நடந்த தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவியேற்கும் விழாவில், நீதிபதிகள் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பின்னால் நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தமை குறித்து சில நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.