140
வடக்கு, கிழக்கில் உரிமையாளர்களுக்கு வழங்க மேலும் 522 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இந்த காணிகளில் தற்போது இருக்கும் இராணுவ முகாம்களை அருகில் இருக்கும் அரச காணிகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்காக அரசாங்கத்திடம் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் அடுத்த சில மாதங்களில் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்க முடியும். இராணுவ முகாம்கள் அருகில் இருக்கு வேறு இடங்களுக்கு மாற்றுவதால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாது எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
Spread the love