பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்துள்ள நிலையில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைக்கிறது.
இந்நிலையில் நேற்றையதினம் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தில் நடைபெற்ற புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் இம்ரான் கான் 176 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ள நிலையில் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறவுள்ள பதவி ஏற்பு நிகழ்வில இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது