பிஜி தீவின் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று காலை 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தீவு கூட்டங்களை கொண்ட பிஜியில் சுமார் 9 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றநிலையில் அந்நாட்டுக்கு அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.19 மணியளவில் பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டத்தில் 559.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்ததாகவும் லாவ் தீவு கூட்டங்களில் அதிகமாக உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்ற போதிலும் அப்பகுதியில் கடல் அலைகள் கொந்தளிப்பாக காணப்படுவதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.