35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான அனுமதி வழங்குவதுத் தொடர்பில், கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்துக்கு தான் எதிர்ப்பை தெரிவிப்பதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த வயதெல்லைத் தொடர்பான சட்டத்தை தான் எதிர்ப்பதுடன், இதனை 25 வயதாக குறைக்குமாறும் தான் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை உயன்வத்த பகுதியில் அபிவிருத்தி வங்கியின் என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்கா அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர், ஒருவர் தொழில் செய்வதற்கான உரிமைக்கு இடமளிக்கபப்பட வேண்டுமெனவும், முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான வேலைத்திட்டம் நல்லாட்சி அரசாங்காத்தால் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.