141
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நேற்றிரவு நான்கு பேர்கொண்ட குழு ஒன்று வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கருங்காலி வீதி காரைநகரைச் சேர்ந்த 54 வயதான நடராசா தேவராசா என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த குறித்த குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love