இலங்கை பிரதான செய்திகள்

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் கிணற்றில் வயோதிப பெண் சடலமாக மீட்பு…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆம் திகதி குறித்த பெண் காணாமல் போயிருந்ததாக அவரது மகன் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிணற்றில் நீர் எடுப்பதற்காக சென்ற ஒருவர் சடலம் ஒன்று காணப்படுவதனை அவதானித்து காவல்துறையினருக்கு தெரிவித்ததனைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.