189
பிரித்தானிய பெண் ஒருவர் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வர்கரோலாவிலிருந்து வெனீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த நோர்வே நாட்டை சேர்ந்த கப்பலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
46 வயதான கே ( Kay) என்னும் பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். கப்பலின் கூரை பகுதிக்கு அந்த பெண் ஏறிய நிலையில் தவறுதலாக கடலில் வீழ்ந்துள்ளதாக கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தான் கடலில் பத்து மணி நேரம் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும் இந்த அற்புதமான மனிதர்கள் தன்னை மீட்டுள்ளார்கள் எனவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
Spread the love