நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என போகோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவின் காசாமுல்லா மாகாணத்தில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மைலாரி எனும் கிராமத்தை அதிகாலை வேளையில் முற்றுகையிட்டு தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.