175
பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வித்தில் தயாரிக்கப்படும் ஆவணப்படம் ஒன்றில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கின்றார். திரு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.. இதுகுறித்து இப் படத்தின் இயக்குநர் திரு விளக்கம் அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஓர் ஆவணப்படத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஒரு நல்ல செயலுக்காக இந்தப் பணியில் இருவரும் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இது குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கரும்பலகைப் பின்னணியில் பாடசாலை மாணவர்கள் இருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும்போது மாணவர்களுக்கான விழிப்புணர்ச்சி ஆவணப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love